ஏலே பித்துக்குளி – சக்தி வடிவேல்

Tributes to Dr Sakthi Vadivel

Tributes to Dr Sakthi Vadivel

ஏலே பித்துக்குளி!

 

‘ ஏன்டா ஒரு கலக்கமாக இருக்கே? ‘

 

‘”ஓர் உற்ற நண்பனை இழந்துவிட்டேன்? ”

 

‘ அடேடே. யாருடா? ‘

Dr. Sakthi Vadivel

Dr. Sakthi Vadivel

 

” சக்தி வடிவேல்.

செண்பகத்தில் இருந்த

நல்லவன்!

பொய் பேசத்தெரியாத பித்தன்!

தனிமையில் இனிமை கண்ட கௌண்டன்!

இக்கையால்,

அக்கைக்குத்தெரியாமல்

வாரி வழங்கிய வடிவேலன்!

எரும்புக்கும் மரியாதை கொடுத்த எளியவன் !

ஐம்பது வருடம் அமெரிக்காவில் இருந்ததின் அடையாளம் காட்டாத

அடக்கவான்!

நடிப்பவர்களை கண்டவுடனே,

கொதித்தெழும்,

குமரன்!

நாடே நடிப்பதால்,

தன்னையே வெறுத்த,

தலைவன் !

கடைசியில்,

சீக்கிரம் ஓடவேண்டும்

என்று கூறியபடி

சென்றுவிட்டான்!

நான்  சிறிது  நேரம்,

சிந்தித்துப்பார்த்தால்,

அவன் செய்தது,

சரியே!

Tributes to Dr Sakthi Vadivel

Tributes to Dr Sakthi Vadivel

 

ஒளவை சொல்படி

தினமும் கசக்கிஅணிந்த

சட்டையும்,

கண்ணதாசன் கூற்றிற்கேட்ப

‘நிலை உயர்ந்த போது தாழ்வு கொண்ட தனிமையும்’

பாரதி சொல்படி,

‘குயில்கள் பாட்டை கேட்கும்பொழுதெல்லாம் ‘

தனக்குள்ளே ஆடிப்பரவசமுற்ற

ஆனந்தமும்,

உன்னுடைய

அடையாளங்களாக

என்னை

சுற்றிவரும்!

எங்கிருந்தாலும்

வாழ்க!

எங்களுக்கு எல்லாம்,

சக்தியை கொடுப்பாய்,

சக்தியே! ”

 

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s