ஏலே பித்துக்குளி – கரிகால் சோழன்

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா அழுதிண்டு  இருக்கே?’

“இந்த மழையால்

மடிந்து கொண்டிருக்கும்

மக்களை நினைத்து? ”

‘அதுக்கு என்னடா

செய்யறது?

3 மாத மழை 3 நாளில்

கொட்டித்தள்ளி

விட்டதாக ஆட்சியாளர்கள்

சொல்லுகின்றார்களே? ‘

” நமது நாட்டில்

‘ ஏன் முடியவில்லை ‘

என்று கூறுவதற்கு

120 கோடி மக்கள்

இருக்கிறார்கள்!

‘என்னால் முடியும் ‘

என்று முடித்து காட்டுவதற்கு,

யாருமில்லை..

கரிகால் சோழன் கேள்வி

பட்டிருக்கியா? ”

‘ ஆமாம் கல்லணை

கட்டிய சிற்பி! ‘

கரிகால் சோழன்

கரிகால் சோழன்

” கரிகால் சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.

கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.

நீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன்.

காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டும் அறிவியலை அன்றைய காலகட்டத்திலேயே அறிந்து, விவசாயச் சிறப்புக்கு அடிகோலிய ஆச்சரியன் கரிகாலன்.

கல்லணை

கல்லணை


மைசூர் குடகு மலையில் பிறந்து தமிழ்நாட்டில் கடலுடன் கலக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்திலேயே பல அணைகள் கட்டப்பட்டு நீரை இப்பொழுது தேக்கிவைக்கிறார்கள். எஞ்சிய நீர் மட்டுமே தென்னக நெற்களஞ்சியமாம் தஞ்சையை எட்டுகிறது.

ஆனால், கரிகாலன் காலத்தில், காவிரியின் குறுக்கே எந்தத் தடைகளும் இல்லாத சூழலில், ஆண்டு முழுவதும் வெள்ளம் பாயும் காவிரி எப்படி கரைபுரண்டு ஓடியிருக்கும்?

அதன் வேகம் எவ்வளவு இருந்திருக்கும்?

அத்தகைய வேகத்தைத் தாங்கவும், எந்நாளும் வறட்சி காணாத வகையில் நீரைத் தேக்கவும், அதனை விவசாயச் செழிப்புக்குப் பயன்படுத்தவும் கரிகாலன் எப்படி எல்லாம் திட்டமிட்டு இருப்பான்?

இந்த மாமனிதனை

போல்  பலர் வாழ்ந்த

இந்த நாடு!

ஆனால் இன்று

பேரூர் ஏரியை

கூரு போட்டு,

பாமர மக்களுக்கு

ஏப்பம் விட்டு,

சாக்கடை வீட்டிற்கு

வரவழைத்து,

சாகும் வரை

நாட்டை நாரடித்து,

மீண்டும் மீண்டும்

ஓட்டுக்காக,

நடித்து விட்டு,

இருக்கும் இந்த

எல்லா ஏமாற்று

எருமைகளை

நினைத்தேன்.

இந்த உயிர் இருந்து

பயன் என்ன

என்று உணர்ந்தேன்!

இன்னும் எமன்

வராது கண்டு

அழுது

கொண்டிருக்கிறேன்.

புரியர்தோடா பித்துக்குளி? ”

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , , . Bookmark the permalink.

3 Responses to ஏலே பித்துக்குளி – கரிகால் சோழன்

 1. s.rajah iyer says:

  Tks Muthuvadivu Rgds

  Like

 2. Muthuvadivu says:

  Good message in right time.

  Like

 3. R.Sethuraman says:

  You said it. R.sethuraman

  Like

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s