ஏலே பித்துக்குளி – கோபாலபுரம்

ஏலே பித்துக்குளி!

 

‘ஏன்டா கோபாலபுரத்திலேயே தண்ணீர் புகுந்துடுத்தாமே? ‘

“ஆமாண்டா..

ரத்தத்தின் ரத்தங்கள்

கொதித்தெழுந்து விட்டார்கள்!

ஊரெல்லாம் கண்டன

ஊர்வலங்கள்!

‘ ஏய் மானம்கெட்ட

தண்ணீரே!

தமிழையே

முழிங்கி விட்டாயா?

உன்னை என்ன

செய்கிறேன் பார்?

93 வருடங்களாக

தண்ணீரையே

தலையாய

மதித்த,

மாபெரும்

தலைவனுக்கே

தண்ணி காட்டி விட்டாய்!

உன்னை என்ன

செய்கிறேன் பார்?

 

ஏரியெல்லாம் குளங்களாக்கி,

குளங்களெல்லாம்

குட்டையாக்கி,

குட்டையெல்லாம்

பட்டாவாக்கி,

பட்டாவெல்லாம்

பணமாக்கி,

பணத்தையெல்லாம்

தண்ணீர் போல்

செலவுசெய்த

சிங்கத்தமிழன்

வீட்டிலேயே

தண்ணீர்

காட்ட வந்தாயா?

உன்னை என்ன

செய்கிறேன் பார்?

தமிழின் தமிழே!

இனத்தின் இனமே!

ரத்தத்தின் ரத்தமே!

உன்னை என்ன

செய்கிறேன் பார்?

திராவிடர் நெஞ்சம்

கொதிக்கிறது!

உதய சூரியன்

உதிக்கிறது!

சீர்திருத்தவாதிகளின்

சினம்

உதைக்கிறது!

உன்னை என்ன

செய்கிறேன் பார்?

தண்ணீரே

இன்று முதல்

நீ எங்கள் பகைவன்!

நீராக திரும்பி

போய் விடு!

இல்லையேல்

உன்னை என்ன

செய்கிறேன் பார்?

“தண்ணீராயினும் தலைவன் பணிசேரார்,

எப்பவும்,

எங்கள் ஆரியர் இவர் ! ”

என்ற வள்ளுவன்

வாக்கிற்கேட்ப,

உன்னை

இடித்து

அடித்து

சித்திரவதை

செய்து

தெருத்தெருவாக

இழுத்து..

உன்னை என்ன

செய்கிறேன் பார்?”

என்று தெருவெல்லாம்

பேச்சு! ”

மழையில் கோபாலபுரம்

மழையில் கோபாலபுரம்

‘டே டே

சரித்தான்டா..

இப்ப தண்ணீர்லே

TV, Sofa Set

எல்லாம்

முழிங்கிடுத்தே

அதுக்கு என்ன

செய்யபோராங்க ? ‘

 

“தலைவனுக்கா

தெரியாது..

கோபாலபுரமில்லையேல்

OLIVER ROAD,

Oliver Road

மூழ்கிடில்,

GRT HOTEL ல்,

பாவப்பட்ட

மக்களுக்குத்தானடா

அவதிகளும்

வேதனைகளும்..

“கொள்ளை அடித்த

கோமகன்காள்,

கூடுவாஞ்சேரி,

உடைந்திடினும்,

கொஞ்சமும்

பஞ்சமின்றி,

வாழ்ந்திடுவர்,

வளமுடன் ”

என்ற

சிலப்பதிகார

கோட்படி,

மிகையில்

மிதந்திடுவரடா,

ஒன்னும்

தெரியாத,

பித்துக்குளி!”

 

 

 

 

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s