ஏலே பித்துக்குளி – நரை நயம் of Mahaperiyava

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா, நரைமுடியை
Dye செஞ்சிண்டிருக்கே?
Anyway you are Going to Die?
Why Dye a Dieing மயிரு? ‘

“உண்மையான
கேள்வி..
மனிதனுக்கு முதல் நரை
காதினில்தான் தோன்றுமாம்!
ஏனென்றால்
‘ இரைதேடியது போதும்
என் அருமை Idiot,
இனியாவதும்
இறைதேடு
என்று ஓதுகிறதாம்! ‘

நரையைப்பற்றி
கம்பனின் நயம்

“மன்னனே! அவனியை மகனுக்கு ஈந்து நீ
பன்னரும் தவம்புரி பருவமீது எனக்
கண்ணா மூலத்தில் கழவு வந்தென
மின்னெனக் கருமைபோய் வெளுத்ததோர் மயிர் “

கறுத்த மழை மேகம் மின்னலை தரும், அதை போன்று கறுத்த முடிகளுக்கு நடுவில் ஒரு வெள்ளைமுடி
“உனக்கு வயதாகிவிட்டது எனவே மன்னனே இந்த அரசை மகனுக்கு கொடுத்து நீ தவம் செய்ய போகவேண்டிய நேரம் இது என அந்த நரை முடி சொல்லியதாம்.
கம்பனின் கவி நயம் இது!

மஹாபெரியவாவின்
தமிழ்நயமும்
காளமேகப்புலவரை
பெரியவா வயதானகாலத்தை
பற்றி வர்ணித்திருப்பது,
நினைவுக்கு வருகிறது :
தனக்கே உரிய முறையில்,
பெரியவா,
” முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால்
கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….”
“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு
காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது
காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை தான்
வருவதற்குள்,
முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….

யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..
ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப்
போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள
ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!”

என்று மிக அழகாக விளக்குகிறார். மேலும் “என்ன அழகு
பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்,மஹாபெரியவா
ஒரு தரம் கிவாஜவுடன்!
நரைவிழுமுன்
இறைதேடடா
Idiot
பித்துக்குளி! “

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, General and tagged , , , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s