ஏலே பித்துக்குளி – No Ball Maya

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா, இந்த No Ball ன்னா
என்னடா? ‘

“நேத்து Cricket Match பாத்தையோ? ”
‘ ஆமாம் அதான் Ball இருக்கே?
அது எப்படி No Ball ங்கலாம்? ‘

” ௺ எங்கேயோ போயிட்டேடா
பித்துக்குளி.
ஆதி சங்கரர்
இதைதான்’ மாயா’
அப்படிங்கறார்!
Out ஆனமாதிரி
ஒரு second இருக்கும்
ஆனால் Out இல்லை!
இந்த உலகமே ஒரு
மாயாங்கறார்!
இந்த மாயாவை
என் பாரதி மிகவும்
அழகாக வர்ணித்திருக்கிறான்:
‘நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானா?-
பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.’
இந்த ஆழ்ந்த
தத்துவத்தை
அறிந்துகொண்டால்
‘சுகதுக்கே சமே கிுர்த்வா’
அப்படின்னுட்டு
மனநிம்மதி
ஏற்படும்!
இல்லைனா
நம்மஉருப்படாத
TV Channels மாதிரி
Ashwin தப்பா
Rightஆன்னுட்டு மண்டையை
போட்டு இந்த மாதம்
முழுதும் Waste
பண்ணின்டிருப்போம்!
௺யும் நானுமே
ஓர் மாயாதான்டா
பித்துக்குளி? ”

‘அதெப்படிடா
௺யும் நானுமே
மாயாங்கறே? ‘

” புரியும்படி
சொல்றேன் கேள்:
௺ உன்னையே
பாத்திருக்கையோ? ”

‘ கண்ணாடிலே தினமும்தான்
பாத்திண்டிருக்கேனே? ‘

” கண்ணாடிலதானே
௺100வருஷம்
வாழ்ந்தாலும்
உன்னுடைய கண்ணை
௺ பாக்காமலே
சாகிறாய்!
இதைத்தான்
மாயாங்கறார்
சங்கரர்!
புரிஞ்சதோடா பித்துக்குளி! ”

‘ அடேங்கப்பா!
ஒரு No Ball க்கே
இவ்வளவு
கொழப்பினேன்னா,
நல்ல வேளை
Kohli Catch ஐ
பத்திவேறே
கேக்கறதா
இருந்தேன்!
ஆளைவிடுப்பா
சாமி! ‘

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , , , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s