ஏலே பித்துக்குளி – வ. உ. சி.

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா அழுதிண்டிருக்கே? ‘

“துக்கம் தொண்டையை
அடைக்கிறது!
செக்கிழுத்த செம்மலை
நினைத்து! ”

‘ ஓ அவர் பிறந்தநாள் நினைவா? ‘

” ஆமான்டா!
கோவைசிறைக்குச்சென்றேன்!
செக்ககை பார்த்ததும்
கதறிவிட்டேன்!
இந்தகாலத்தில் ஓர்
கார்வைத்தவனே
வசதியுள்ளவன்
என்றால், அந்தகாலத்திலேயே
ஓர் கப்பலேவிட்டவன்
எவ்வளவு செல்வந்தனாக
இருந்திருப்பான்!
வாழ்ந்திருப்பான்!
எல்லாமே அழிந்து
கோவை சிறையிலே
செக்கிழுத்து
வெளியே வந்தவனை
வரவேற்க கூட
ஆளில்லாத நாடு இது!
கதறினேன்! ”

‘கக்ஷ்ட்டமாதான் இருக்கு!
அவர் கடைசி பையனை
சென்று பாராப்பயே? ‘

” ஆமாம்!
வல்லேச்வரன் மதுரையிலே!
இந்த வருடம்
இறந்துவிட்டார்!
பணம் பொருள்
எடுத்துச்சென்றால்
பார்க்கமாட்டார்! ”

‘ அவர் பேரு கூட
ஓர் பிரிட்டிஷ் ஜட்ஜ்
Wallace ன்னு சொல்வையே? ‘

” ஆமாம்
கையிலே காசில்லாமல்
படித்த வக்கீல் தொழிலையும்
வாழ்வதற்கு
பயன்படுத்த கூடாது
என்று உத்தரவிட்டது
பிரிட்டிஷ் அரசு!
அதை எதிர்த்து
தாமே வாதிட்டார், வ.உ.சி !
அவருடைய
ஏழ்மையை கருதி
Judge Wallace
அரசு ஆணை தவறுஎன்றுரைத்தார்!
அப்பொழுது
பிறந்த தன் கடைசி
பையனுக்கு
நன்றி உணர்ச்சியுடன்
வல்லேச்வரன் என்று
பெயரிட்டார்! ”

‘அழாதேடா! தேற்றிக்கொள்ளடா!
நன்றிகெட்ட நாடடா! ‘

” கப்பலோட்டிய தமிழன்
பிறந்ததேதி தெறியாதடா,
கமலுக்கும்ரஜனிக்கும்,
பாலபிக்ஷேகமடா, பித்துக்குளி!
திலகரை யாரென்பர்,
திலீப்குமாருக்கு
தீபாராதனை!
இந்தகயவர்களைபற்றி
என்றோ எழுதிவைத்தான்
என் பாரதி!
“நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!
நண்ணிய பெருங்கலை கள்-பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின் ற
புண்ணிய நாட்டினி லே-இவர்
பொறியற்ற விலங்குகள் போலவாழ் வார்”
ஆனாலும்
உண்மை முற்றிலும்
உறையவில்லை,
இந்த சிம்மக்குரல்
சிம்மாஞ்சனா
போன்ற
இளசுகளை
கேட்க்கும் போதுஎன்று தேற்றிக்கொள்கிறேன்!


புரிஞ்சதோடா பித்துக்குளி? “

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, Patriots and tagged , , . Bookmark the permalink.

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s