ஏலே பித்துக்குளி – பாட்டுக்கொரு புலவன் பாரதி

பாட்டுக்கொரு புலவன் - பாரதி

பாட்டுக்கொரு புலவன் – பாரதி 

‘ஏண்டா, பாரதி நினைவு நாளாமே? ‘
“9/11 பாரதியின் நினைவு நாள்!
உலகம் போற்றும்
Chicago Speech ஐ
Swami Vivekananda வழங்கிய நாள்!
கயவர்கள் WTC ஐ
தகர்த்த கரி நாள்! ”
‘ பாரதியை பற்றி ஏதாவது உளறேன்! ‘
” பாரதிக்கு உற்ற நண்பர்
சக்கரைசெட்டியார்!
வசதிபடைத்தவர்!
ஏழ்மையிலேயே இருந்த
பாரதியின் கவிதைகளை
பார்த்துவிட்டு தன்னுடைய வீட்டிலேயே பாரதி
எப்பொழுதும் அமர்ந்து
எழுதுவதற்கு ஒரு அறையை கொடுத்தார்!
செட்டியாரின் ஒரே
பையனை Paris க்கு
படிக்க அனுப்பியிருந்தார்கள்!
ஒரு நாள் ஓர் தந்தி
வந்தது!
செட்டியார் பையனை
எமன்எடுத்துக்கொண்டுவிட்டான் என்று!
செட்டியார் மனைவிக்கு
கூட சொல்லாமல்,
பாரதியிடம் மட்டுமே
சொல்லி கதறி
துவண்டார்!
பாரதிக்கு வேறு
என்ன தெறியும்!
பேனாவை எடுத்தான்!
எழுதினான்:

‘நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – என்னைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?’
இந்த பாட்டை
தினமும் பாடுவேன்!
‘சுமை என வாழ’
இக்ஷ்டமில்லையடா,
பித்துக்குளி! ”
‘ஆமாம்
உன்னோட நெல்லை
கண்ணனின் பாரதி பேச்சு? ‘
” இதோ கேள்!
கேட்டுக்கொண்டே
இருக்கலாம்!
பாரதியைபற்றி
வேறு யாரும்
இவ்வளவு அழகாக
பேசியதில்லையடா,
பித்துக்குளி! ”

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி, General and tagged . Bookmark the permalink.

Tks for your views.