ஏலே பித்துக்குளி – சரஸ்வதி பூஜை

ஏலே பித்துக்குளி – சரஸ்வதி பூஜை!

Adi Sankara

‘ஏன்டா எதுவும் அறிவுரை உண்டோ?’
“நான் யார் அறிவுரை
கொடுக்க!
நம்மகிட்ட இருக்கும்
திருக்குறள் முதல்
தைத்ரீய உபனிஷத்
வரை கொட்டிக் கிடக்கும் அறிவுரைகளை ஒருதரம்
ஓர் வாழ்நாளில் புரியாட்டாலும்
படித்தாலேபோதும்!
பிறந்தபயனை
அடைந்துவிடலாம்!
அதுக்குதான்
ஒளவையார் 
‘கற்றது கைமண் அளவு ‘என்றார்!
சங்கரர் எதை
விடனும் என்பதை
அழகாக
‘பிரஸ்னோத்தர ரத்ன மாலிகாவில் ‘
வர்ணிக்கிறார்!
*1. எது இதமானது ?*
தர்மம்.

*2. நஞ்சு எது ?*
பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

*3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?*
பற்றுதல்.

*4. கள்வர்கள் யார் ?*
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

*5. எதிரி யார் ?*
சோம்பல்.

*6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?*
இறப்புக்கு.

*7. குருடனை விட குருடன் யார் ?*
ஆசைகள் அதிகம் உள்ளவன்.

*8. சூரன் யார் ?*
கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

*9.மதிப்புக்கு மூலம் எது ?*
எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.

*10. எது துக்கம் ?*
மன நிறைவு இல்லாமல் இருப்பது.

*11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?*
குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

*12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?*
இளமை, செல்வம், ஆயுள்…. ஆகியவை.

*13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?*
நல்லவர்கள்.

*14. எது சுகமானது ?*
அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

*15. எது இன்பம் தரும் ?*
நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

*16. எது மரணத்துக்கு இணையானது ?*
அசட்டுத்தனம்.

*17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?*
காலமறிந்து செய்யும் உதவி.

*18. இறக்கும் வரை உறுத்துவது எது ?*
ரகசியமாகச் செய்த பாவம்.

*19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?*
துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்… ஆகியோர் !

*20. சாது என்பவர் யார் ?*
ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

*21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?*
சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

*22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?*
எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

*23. செவிடன் யார் ?*
நல்லதைக்
கேட்காதவன்.

*24. ஊமை யார் ?*
சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

*25. நண்பன் யார் ?*
பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

*26. யாரை விபத்துகள் அணுகாது ?*
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்

நல்ல பண்புடைய
மனிதனாக திருந்தி
மன நிறைவுடன்
மடியவேண்டும்ன்னு
சரஸ்வதி தேவியை
வேண்டிக்கடா
பித்துக்குளி! “

Advertisements

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , , . Bookmark the permalink.

One Response to ஏலே பித்துக்குளி – சரஸ்வதி பூஜை

  1. Raguram Ganesan says:

    Good ones.Thanks for reminding the basics

    Like

Tks for your views.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s