ஏலே பித்துக்குளி – கண்ணதாசன்

ஏலே பித்துக்குளி!

கண்ணதாசன்

 

ஏன்டா, கண்ணதாசனுக்கு கடவுள் நம்பிக்கை எப்படி வந்ததுன்னு சொல்றேன்னே, நேற்று? ‘

 

“கண்ணதாசனும் அன்பில் தர்மலிங்கமும் Dalmiapuram போராட்டத்திலே Trichy Jail லே அடைக்கப்பட்டிருந்தார்கள்.

கண்ணதாசன் எப்பொழுதும் அந்த சிறையிலுல்ள மற்ற கைதிகளை பற்றிய விவரங்களை உற்று நோக்கி வந்தார்!

4 கைதிகள் 2 கொலை குற்றத்திற்காக தினமும் Court க்கு சென்று வந்தனர்!

They were charged with Rape and murder of Two women, a widow and her daughter and  afterwards for  looting their Jewellery!

கண்ணதாசன் எழுதுகிறார் ‘அந்த நால்வரில் ஒருவன் மட்டும் Court க்கு போ கும் போதும், அவர்கட்கு தூக்கில் சாகும் தீர்ப்பு வரை சிரித்து கொண்டே இருந்தான்.

அவனை அனுகி நான் ஏனப்பா நீ மட்டும் மனம் தளராமல், எப்படி சிரித்துக்கொண்டிரிக்கிறாய் என கேட்டேன்.

அதற்கு அவன் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது!

அவன் சொன்னான்,

‘அய்யா இந்த கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை!

ஆனால் இதற்கு முன்பு 3கொலைகள் செய்திருக்கேன். அதிலே மாட்டவே இல்லை!

கடவுள் ஒருவர் நம்மை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

அதனால்தான் இதிலே என்னை மாட்டிவிட்டுட்டார்! ‘என்றான் அந்த படிக்காத ஞானி!

சிலகாலம் சிந்தித்தேன்.

அப்பொழுது என்னுடைய நகரத்தார் எல்லாம் இளையாத்தங்குடியில் தங்கி இருந்த காஞ்சி மஹானை சென்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் என்னை காஞ்சி மஹான் கூப்பிட்டதாக தகவல் வந்தது!

எனக்கு ஒன்றும் புரியவில்லை!

நானோ கோவில் குளங்கட்க்கு செல்வதில்லை!

இருந்தாலும் அவரை பற்றி எனக்கு வேண்டியவர்கள், நன்றாக பேசியதால்,

சென்றேன்.

அவரை பார்த்தவுடன் ஓர் ஞான ஒளி வீசியதுபோல் உணர்வு!

அவர் எனக்கு கௌரவம் செய்து ‘உனக்கு காளி தாசன் மாதிரி சரஸ்வதி கடாக்ஷம் உள்ளது! அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்’ என்றார்!

நான் ஆத்திகனான அப்புறம்  எழுதிய பாட்டுக்கள் தான் என்னை உலகலவிளே உயர்த்தியது! ‘

என்று கண்ணதாசன் கூறியுள்ளார்.

புரியர்தோடா பித்துக்குளி? “

 

About s.rajah iyer

An MBA.. Interested in writing,Reading..Indian Philosophy
This entry was posted in ஏலே பித்துக்குளி and tagged , , , . Bookmark the permalink.

Tks for your views.